பொலன்னறுவையிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க லங்காதிலக்க விஹாரையின் கட்டிடத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் ...
பொலன்னறுவையிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க லங்காதிலக்க விஹாரையின் கட்டிடத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் கடந்த 18ம் திகதி நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்னல் தாக்கம் காரணமாக லங்காதிலக்க விஹாரையின் கட்டிடத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த நிலையில், மின்னல் தாக்கத்தினால் சேதடைந்துள்ள லங்காதிலக்க விஹாரையின் புனர்நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்திய கலாசார நிதியத்தின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த மின்னல் தாக்கத்தினால் விஹாரையின் சுவரொன்றுக்கே சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
எனினும், விஹாரையிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க புத்தர் சிலைக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.