மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை கடுமையாக கடைபிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கொரோனா ஒ...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை கடுமையாக கடைபிடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
மேலும், ஒக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் விடுமுறை நாட்களாக உள்ளன.
ஆகவே குறித்த தினங்களில் அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.