யாழில் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களுக்குள் பொலிஸ் அதிகாரி பாதணிகளுடன் சென்றதாக செய்திகள் வெளியான நிலையில், இது தொடர்பில் உடன விசாரணைகள் ஆரம...
யாழில் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களுக்குள் பொலிஸ் அதிகாரி பாதணிகளுடன் சென்றதாக செய்திகள் வெளியான நிலையில், இது தொடர்பில் உடன விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இவ்விசாரணைகள் இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.
பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய இந்த விசாரணைகள் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணை அறிக்கை திணைக்களத்தின் செயலாளரிடம் கையளிக்கப்படும்.
இதையடுத்து செயலாளரினால் அவ்வறிக்கை பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த அறிக்கைக்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிய முடிகின்றது.
யாழ்ப்பாணம் – தொண்டமனாறு செல்வசந்நிதி ஆலயம் மற்றும் வல்லிபுர ஆழ்வார் ஆலயங்களுக்கு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் நேற்று பாதணியுடன் பிரவேசித்த சம்பவம் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.