பாடசாலைகளை ஆரம்பிக்கும் செயற்பாடு தொடர்பில், அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக இலங்கை ஆசி...
பாடசாலைகளை ஆரம்பிக்கும் செயற்பாடு தொடர்பில், அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
எவ்வாறான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும் தங்களது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.