யாழ்ப்பாணத்தின் 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் நோக்கம் கிடையாது. என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண கூறியுள்ளார். ஆனாலும் முதல...
யாழ்ப்பாணத்தின் 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் நோக்கம் கிடையாது. என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண கூறியுள்ளார்.
ஆனாலும் முதலீடுகளின் போது சர்வதேச நாடுகளை தெரிவு செய்யும் வேளையில் தெரிவாவது சீன நிறுவனம் என்றால் அதனை எவரும் தவறான விதத்தில் விமர்சிக்கக்கூடாது.
சர்வதேச நாடுகளுடன் முன்னெடுக்கும் உடன்படிக்கைகளினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றால் அதனை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அனுமதிக்க மாட்டார் எனவும் கூறினார்.
கடந்த ஈராண்டு காலத்தில் முப்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விதமாக ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இதனை கூறினார்.