பாகிஸ்தான் – சியல்கோர்ட் பகுதியில் மிக கொடூரமான முறையில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு, எரியூட்டி கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின்...
பாகிஸ்தான் – சியல்கோர்ட் பகுதியில் மிக கொடூரமான முறையில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு, எரியூட்டி கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் இறுதிக் கிரியைகள் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, அன்னாரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 8ம் திகதி அரச அனுசரணையுடன் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உயிரிழந்த பிரியந்த குமார தியவடனவின் உடல் பாகங்கள் இன்று மாலை 5 மணியளவில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இவ்வாறு நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட அன்னாரது உடல், கனேமுல்ல பகுதியிலுள்ள அவரது வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாளை மறுதினம் (08) இறுதிக் கிரியைகளை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.