நல்லூர் இராசதானியின் தோரணவாசல் புனருத்தாரணம் செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. இன்று மதியம் 12 மணிக்கு யாழ்ப்பாண மரபுரிமைய...
நல்லூர் இராசதானியின் தோரணவாசல் புனருத்தாரணம் செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
இன்று மதியம் 12 மணிக்கு யாழ்ப்பாண மரபுரிமையத்தின் தலைவர் பேராசியர் ப.புஸ்பரட்ணம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், மாநகர ஆணையாளர் இ.ஜெயசீலன், நல்லூர் பிரதேச சபை தவிசளார் ம.மயூரன்,
தேசிய கலாசர நிலையத்தின் யாழ் மாவட்ட செயற்திட்ட பணிப்பாளர் ஆனந், தொல்பொருள் திணைக்கள யாழ்.பிராந்திய உதவிப் பணிப்பாளர் நளின் வீரரத்ன,
நல்லூர் பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உபதலைவர் பேராசிரியர் ரவிராஜ்,
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.