தேசிய கல்வியியல் கல்லுாரி கற்றலை நிறைவுசெய்த 355 பேருக்கு வடமாகாண கல்வி அமைச்சிற்குட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக...
தேசிய கல்வியியல் கல்லுாரி கற்றலை நிறைவுசெய்த 355 பேருக்கு வடமாகாண கல்வி அமைச்சிற்குட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் கூறியுள்ளார்.
ஆண்டுதோறும் கல்வியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் ஆசிரிய மாணவர்கள் ஆசிரியர்களாக நியமனம் பெறும் சமயம் கடந்த ஆண்டுகளில் எமது மமாகாணத்திற்கு 250 முதல் 300 வரையான ஆசிரியர்களே கிடைக்கப்பெற்றனர்.
இதனால் நாம் முற்கூட்டியே இந்த ஆண்டு வன்னிப் பாடசாலைகளின் தேவை கருதி அதிக ஆசிரியர்களை எண்ணிக்கை வாரியாக கோரியிருந்தோம். இதன் பயணாக 18 பாடங்களிற்கான 355 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் பெயர் விபரங்கள் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதேநேரம் இந்த 355 ஆசிரியர்களிற்கும் மேலதிகமாக வடமாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளிற்கும் சில நூறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.