கேகாலை – ரம்புக்கணை பகுதியில் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு கட்டளை பிறப்பித்த மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகளை கைது செய்யுமாறு பொ...
கேகாலை – ரம்புக்கணை பகுதியில் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு கட்டளை பிறப்பித்த மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிகளை கைது செய்யுமாறு பொலிஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்ன, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ரம்புக்கணை பகுதியில் கடந்த 19ம் திகதி மக்கள் போராட்டத்தை கலைப்பதற்காக துப்பாக்கி சூடு நடத்திய மற்றும் அதற்கு கட்டளை பிறப்பித்த பொலிஸாரை கைது செய்து நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்துமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் நேற்று பொலிஸ் மாஅதிபருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவிற்கு அமையவே, பொலிஸ் மாஅதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இந்த அறிவுறுத்தலை பிறப்பித்துள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்திருந்ததுடன், 33 பேர் காயமடைந்திருந்தனர்.
காயமடைந்தவர்களில் 20 பொலிஸார் அடங்குவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்தன.