இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும் என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ...
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும் என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, துறைமுகம், சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம், ஏற்றுமதி தொழிற்துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் இன்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் இதற்கமைய அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்க இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சரவை பேச்சாளர், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் முப்படை என்பவற்றின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும்.