யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள் ஒரு எரிபொருள் நிலையத்துக்கு அதிக அளவிலான அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அத்தியாவசிய உத்தியோகத்தர்கள் எனப் பல ஆயிர...
யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள் ஒரு எரிபொருள் நிலையத்துக்கு அதிக அளவிலான அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அத்தியாவசிய உத்தியோகத்தர்கள் எனப் பல ஆயிரம் பேரை ஒரே தடவையில் எரிபொருளை பெற அனுப்புவது முறையற்ற செயற்பாடென எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்கும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் .
அதாவது சுகாதார உத்தியோகத்தர்களை ஒரே எரிபொருள் நிலையத்துக்கு அதிகளவிலானோரை ஒரே தடவை எரிபொருளுக்காக அனுப்புகின்ற செயற்பாடு இடம்பெற்று வருகிறது.
இதன் காரணமாக வெயிலில் நீண்ட வரிசையில் ஆண்கள் பெண்கள் என பல ஆயிரம் பேர் மணிக்கணக்காக எரிபொருளுக்காக காத்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது எரிபொருளை பெறுவதற்காக நாட்கனக்காக எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கும் ஆட்டோ சாரதிகள் மற்றும் அன்றாட கூலித் தொழிலாளர்கள் என பல நூறு பேர் எரிபொருள் நிலையத்தில் காத்திருக்கின்றனர்.
மேலும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட அடிப்படையில் எரிபொருள் வினியோகம் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில் அன்றாட கூலித் தொழிலில் ஈடுபடுபவர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுதுகின்றது.
ஆகவே எரிபொருளை பெறுவதற்கு சரியான முறை இல்லாத காரணத்தினால் எரிபொருளுக்காக காத்திருப்போர் தமக்கிடையே முரண்படும் சூழ்நிலை எழுந்துள்ளது.
அத்தியாவசிய சேவை மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு கிழமையில் ஒரு நாளை ஒதுக்கி அவர்களுக்கான எரிபொருளை சரியான கணக்கில் வழங்காது எரிபொருள் கிடைக்கும் நாள் முழுவதும் அவர்களும் எரிபொருளை பெறுகின்ற நிலைமை காணப்படுகிறது.
ஆகவே மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் பொறுப்பான உத்தியோகத்தர்கள் சரியான வழிமுறையை கையாண்டு கிடைக்கும் எரிபொருளை அனைவருக்கும் வழங்க கடிய ஒரு முறையை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.