யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த எரிபொருள் அட்டை மற்றும் வாகன இலக்கத்தின் இறுதி இலக்கம் என பல நடைமுறைகள் அமுலி...
யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த எரிபொருள் அட்டை மற்றும் வாகன இலக்கத்தின் இறுதி இலக்கம் என பல நடைமுறைகள் அமுலில் உள்ளபோதும் தொடர்ச்சியாக அந்த நடைமுறைகள் மீறப்படும் சம்பவங்கள் இடம்பெறுவதாக மக்கள் சாடியுள்ளனர்.
யாழ்.சங்கானை ப.நோ.கூ சங்கத்தின் தலைவர் நேற்றய தினம் சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் யாழ்.மாவட்டம் முழுவதும் அமுலில் உள்ள எரிபொருள் அட்டை நடைமுறையை பிற்பற்றவிடாமல் பிரதேச செயலக ஊழியர்களை விரட்டியிருக்கின்றார்.
மேலும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் ஒருவருடைய உறவினருக்கு அவருடைய வாகன இலக்கத்தின் இறுதி இலக்கம் வெள்ளிக்கிழமைக்க உரியது அல்ல. என்றபோதும் எரிபொருள் வழங்கியிருக்கின்றார்.
இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில் சங்கானை பிரதேச செயலகம் தலையீடு செய்து அதனை சீர்செய்வதற்கு முயற்சித்தபோதும் அதனை தான்தோன்றித்தனமாக குறித்த சங்க தலைவர் உதாசீனம் செய்துள்ளார்.
இதனால் மக்களுக்கு உண்டாகும் அசௌகரியங்களுக்கு சங்க நிர்வாகமே பொறுப்பு என கூறி பிரதேச செயலகம் முற்றாக விலகியுள்ளது. இதனால் மிக பெருமளவான மக்கள் பாதிக்கப்படவுள்ளனர்.
இதேபோல் யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் அதே சமயம் மறுபக்கம் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களுடன் வரும் பொலிஸார் ஒரு தடவைக்கு மேல் எரிபொருளை பெற்றுச் சென்றதாகவும்,
இந்த சம்பவம் நேற்று காலை தொடக்கம் இடம்பெற்றதாகவும் அங்கிருந்த பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். இப்படியேபோனால் எரிபொருள் அட்டையும், வாகன இலக்கத்தின் இறுதி இலக்க நடைமுறையும் சாதாரண மக்களுக்கு மட்டும்தான் என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.