யாழ்ப்பாணம் - கொழும்பு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பேருந்துகளுக்கு எரிபொருள் இ.போ.ச ஊடாக வழங்கப்படும் நிலையில் கட்டணம் 4 ஆயிரம்...
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பேருந்துகளுக்கு எரிபொருள் இ.போ.ச ஊடாக வழங்கப்படும் நிலையில் கட்டணம் 4 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரையில் அறவிடப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்படும் தனியார் சொகுசு பஸ்களுக்கு ஒரு வழி பயணத்திற்காக சுமார் 150 லீட்டர் டீசல் நிர்ணய விலையில் இ.போ.ச ஊடாக வழங்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணம் - கொழும்பு பாஸ் கட்டணம் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை ஒருவழி கட்டணமாக அறவிடப்படுகிறது. குறித்த சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கான எரிபொருள் அனுமதியினை யாழ்.மாவட்ட செயலகம் வழங்குவதாக அறிய கிடைத்த நிலையில்
பொதுமக்களிடம் அதிக தொகையினை அறவிடுவதை கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நிர்ணய விலையில் எரிபொருளை பெற்று சேவையில் ஈடுபடும் பேருந்துகளை அடையாளப்படுத்தி பயணிகளின் ஆசன ஒதுக் கீட்டினை நிர்ணயம் செய்ய வேண்டு.
ஆகவே குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.