யாழ்.தென்மராட்சி பிரதேசத்திலுள்ள விவசாயிகளுக்கு பெரும்போகத்திற்கான ஆடி உறவை மேற்கொள்வதற்கு உழவு இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருள் வழங்கப்பட...
யாழ்.தென்மராட்சி பிரதேசத்திலுள்ள விவசாயிகளுக்கு பெரும்போகத்திற்கான ஆடி உறவை மேற்கொள்வதற்கு உழவு இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
தென்மராட்சி பிரதேச கமக்கார அமைப்புகள் கூட்டாக முன்வைத்த கோரிக்கை அமைவாக நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு டீசல் வழங்கப்பட்டது.
142 உழவு இயந்திரங்களுக்கு 68 லீற்றர் வீதம் இதன்போது வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதன் காரணமாக பெரும் போக நெற்செய்கை பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே விவசாயிகளுக்கு டீசல் விநியோகிக்கப்பட்டதாக நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், தென்மராட்சி பிரதேசத்தில் உழவு இயந்திரங்களை உடைய விவசாயிகள் யாராவது தவறவிடப்பட்டிருந்தால் கமக்கார அமைப்பின் ஊடாக தொடர்பு கொண்டு அதனைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.