புதுக்குடியிருப்பு ஒளிரும் வாழ்வு அமைப்பின் கோரிக்கைக்கு அமைய மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலர் உணவு பொருட்கள் இன...
புதுக்குடியிருப்பு ஒளிரும் வாழ்வு அமைப்பின் கோரிக்கைக்கு அமைய மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலர் உணவு பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார உதவிப்பணியாக,அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி,பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கான(ITR)பணிப்பாளருமான யாழ், தீவகம்,வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) பூமணி அம்மா அறக்கட்டளையின் செயலாளரும் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம்,ஆலோசகர்,இ. மயில்வாகனம்,ஒளிரும் வாழ்வு அமைப்பின் தலைவர் அம்பிகைபாலன் ஆகியோரால் மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.