யாழ்.சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி பணிமனையின் வாசலில் வீதி ஓரமான பரீட்சை வினாத்தாள்கள் வீசப்பட்டுக் கிடந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கும்படி ...
யாழ்.சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி பணிமனையின் வாசலில் வீதி ஓரமான பரீட்சை வினாத்தாள்கள் வீசப்பட்டுக் கிடந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கும்படி வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தொண்டமனாறு வெளிக்கள நிலையம் வடமாகாண கல்வி திணைக்களத்தின் அனுசரணையுடன் நடத்தும் பரீட்சைக்கான வினாத்தாள்கள் சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி அலுவலக வாசலில் வீதி வீசப்பட்டுக் கிடந்த சம்பவம் தொடர்பில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வடமாகாண ஆளுநர் செயலகத்தால் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.