கடற்கரையை சுத்தப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரத்தினை முன்னிட்ட வேலைத்திட்டத்தின் யாழ் மாவட்டத்திற்கான நிக...
கடற்கரையை சுத்தப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரத்தினை முன்னிட்ட வேலைத்திட்டத்தின் யாழ் மாவட்டத்திற்கான நிகழ்வு இன்றையதினம் புங்குடுதீவில் இடம்பெற்றது.
புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலை கடற்கரையை தூய்மையாக்கும் இன்று காலை 7.30 மணிமுதல் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் உதவிக் கடற்சூழல் உத்தியோகத்தர் சதீஷ்குமாரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், வேலணை பிரதேச செயலர் கே.சிவகரன் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை பணிப்பாளர் து.சுபோகரன், புங்குடுதீவு கடற்படை கட்டளை அதிகாரி வல்கம்பாய, பி.பி.கே. பட்டய கணக்காளர் நிறுவன முகாமையாளர் சி.உமாபதி, புங்குடுதீவு மத்திய கல்லூரி மாணவர்கள், கடற்படையினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த கடற்கரை தூய்மைப்படுத்தல் பணிகள் 19ஆம் திகதி யாழ் பண்ணை கடற்கரையிலும், 20ஆம் திகதி நெடுந்தீவு கடற்கரையிலும், 21ஆம் திகதி வல்வெட்டித்துறை நேதாஜி கடற்கரையிலும், 22ஆம் காரைநகரிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.