யாழ்ப்பாண லயன்ஸ் கழகமும் நல்லூர் வடக்கு சனசமூக நிலையமும் இணைந்து ஜே/257 கிராமசேவகர் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு வீட...
யாழ்ப்பாண லயன்ஸ் கழகமும் நல்லூர் வடக்கு சனசமூக நிலையமும் இணைந்து ஜே/257 கிராமசேவகர் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்டப் பயிர்கள்,மரக்கன்றுகள், இயற்கைப் பசளைகள் என்பவற்றை அண்மையில் வழங்கிவைத்தது.
இந்த நிகழ்வு நல்லூர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
லயன்ஸ் கழகத்தின் மரநடுகைக்கு பொறுப்பான மாவட்ட தலைவர் லயன் கு.ஜெயந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மரநடுகை சம்பந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக லயன்ஸ் கழக சர்வதேச பணிப்பாளர் லயன் சுனில் வட்டவழவும் கெளரவ விருந்தினராக லயன்ஸ் கழகத்தின் கவுன்சில் தலைவர் வைத்தியர் லயன் வை.தியாகராஜாவும் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானமு
ம் கலந்துகொண்டனர்.
ம் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பயனாளிகள்,லயன்ஸ் கழக உறுப்பினர்கள், நல்லூர் வடக்கு சனசமூக நிலைய உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.