சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடாவுக்கு செல்ல முற்பட்ட நிலையில் வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 152 பேர் இன்று நாட...
சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடாவுக்கு செல்ல முற்பட்ட நிலையில் வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 152 பேர் இன்று நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் 08ஆம் திகதி அவர்கள் பயணித்த கப்பல் பழுதடைந்தமையை அடுத்து அவர்கள் ஜப்பானிய கப்பல் ஒன்றினால் மீட்கப்பட்டு வியட்நாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்தநிலையில் அவர்களில் 152 பேர், மீளவும் நாடு திரும்புவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ள நிலையில், அவர்களை விசேட விமானம் ஒன்றின் ஊடாக இன்று நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது கிடைத்த தகவலின்படி, அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாமில் இருந்து விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச குடிபெயர்வாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.