2022 ஜனவரி 22ம் திகதிக்கு முன்னர் மாகாண ஆளுநர்கள் மாற்றம் இடம்பெறலாம். என உள்வீட்டு தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசி...
2022 ஜனவரி 22ம் திகதிக்கு முன்னர் மாகாண ஆளுநர்கள் மாற்றம் இடம்பெறலாம். என உள்வீட்டு தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் முன்னாள் அமைச்சரும் மொட்டுக் கட்சியின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்சவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில்
ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆளுநர்களும் பெரமுனாவுக்கு 5 ஆளுநர்களுமாக இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மேல் மாகாண ஆளுநராக ஜோன் அமரதுங்க, வடமேல் மகன ஆளுநராக பாலித ரங்கே பண்டாரா,
மத்திய மாகாண ஆளுநராக நவீன் திசாநாயக, கிழக்கு மாகாண ஆளுநராக தயாகமகே ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.