வடமாகாண சுகாதார அமைச்சின் கீழ் தனியான பிரிவாக மனநல மேம்பாட்டு பிரிவு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பிர...
வடமாகாண சுகாதார அமைச்சின் கீழ் தனியான பிரிவாக மனநல மேம்பாட்டு பிரிவு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரிவானது போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை வழிபடுதல், ஓட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சிகளை வழங்குதல்,
தற்கொலைக்கு முயற்சிப்பவர்களை தடுத்து வழிபடுதல் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பராமரித்தல் போன்றன இடம்பெறும்.
வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் குறித்த பிரிவினை கவனிப்பதற்கு மனநல மேம்பாட்டு பிரிவின் இணைப்பாளராக வைத்திய கலாநிதி த.குகதாசனை வடமாகாண ஆளுநர் நியமித்துள்ளார்.
குறித்த செயற்திட்டத்தினை முறையாக மேற்கொள்வதற்கு நேற்று முன்தினம் புதன்கிழமை வடமாகாண சுகாதார பணிப்பாளர்,
உளநல மருத்துவர்கள் மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் அடங்கிய கூட்டம் ஒன்று அண்மையில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்காது.