பல்கலைக்கழகங்களுக்குள் பாரியளவில் போதைப்பொருள் உட்புகுந்தமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினருக்கு ...
பல்கலைக்கழகங்களுக்குள் பாரியளவில் போதைப்பொருள் உட்புகுந்தமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று (13) காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமே பல்கலைக்கழக அமைப்பைப் பாதுகாக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.