பெந்தோட்டை – போதிமலுவ பிரதேசத்தில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 30 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உல்லா...
பெந்தோட்டை – போதிமலுவ பிரதேசத்தில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 30 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உல்லாச விடுதியில் சிலர் போதைப்பொருள் பாவனையுடன் விருந்துபசாரம் ஒன்றை நடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 27 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் வத்தளை, கொழும்பு – புதுக்கடை, நாரஹேன்பிட்டி, கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை, மட்டக்குளி, வலஸ்முல்ல உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.