ஸ்ரீ லங்கா இன்ஷ_ரன்ஸ் – ஸ்ரீ லங்கா டெலிகொம் என்பவற்றை விற்பனை செய்யும் முயற்சியை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, கொழும்...
ஸ்ரீ லங்கா இன்ஷ_ரன்ஸ் – ஸ்ரீ லங்கா டெலிகொம் என்பவற்றை விற்பனை செய்யும் முயற்சியை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்றைய தினம் (8) தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பொதுச் சொத்துக்கள் விற்பனைக்கு எதிரான தொழிற்சங்க இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொதுசொத்துக்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்து, கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காகவா தேசிய சொத்துக்களை விற்பனை செய்கின்றீர்கள்;, ஜனாதிபதி ரணிலுக்கு மக்கள் ஆணை இல்லை, தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்து உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஸ்ரீ லங்கா இன்ஷ_ரன்ஸ் உள்ளிட்ட ஊழியர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.