நாய் குட்டியொன்றை பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக, ஊடக சந்திப்பொன்றை நடாத்தி, தன் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்திய, முன்னா...
நாய் குட்டியொன்றை பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக, ஊடக சந்திப்பொன்றை நடாத்தி, தன் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்திய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆதர்ஷா கரதனா ஆகியோரிடம், 1.5 பில்லியன் ரூபா நட்டஈட்டை செலுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, நோட்டீஸ் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆதர்ஷா கரதனா ஆகியோர் தன்மீது முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுக்களும் போலியானவை என அவர் கூறியுள்ளார்.
நாய் குட்டியொன்றை பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக, ஆசு மாரசிங்க மீது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆஷ{ மாரசிங்கவுடன் உறவுகளை பேணியதாக கூறப்படும் ஆதர்ஷா கரதனா ஆகியோர் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தனர்.
குறித்த இருவரும் ஊடக சந்திப்பில் காண்பித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள், போலியாக தயாரிக்கப்பட்டவை எனவும் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
தன்மீது தேவையற்ற எண்ணமொன்றை மக்களுக்கு ஏற்படுத்தவும், மக்களை தவறாக வழிக்கு கொண்டு செல்லும் வகையிலும் இந்த இருவரும் செயற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஹிருணிகா பிரேமசந்திரவிடம் 500 மில்லியன் ரூபாவும், ஆதர்ஷா கரதனாவிடம் ஒரு பில்லியன் ரூபாவும் நட்டஈடாக கோரியுள்ளார்.
கடந்த 23ம் திகதி நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட அனைத்து கருத்துக்களும் போலியானவை என, ஆசு மாரசிங்க சட்டத்தரணி ஊடாக அனுப்பியுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.