இந்தியாவின் கேரள மாநில விழிஞ்சம் என்ற இடத்தில், அதானி குழுமத்தின் துறைமுகத் திட்டமொன்று, நிறைவுபெற்றதும், இலங்கை துறைமுகத்தின் வணிகத்தைக் கை...
இந்தியாவின் கேரள மாநில விழிஞ்சம் என்ற இடத்தில், அதானி குழுமத்தின் துறைமுகத் திட்டமொன்று, நிறைவுபெற்றதும், இலங்கை துறைமுகத்தின் வணிகத்தைக் கைப்பற்ற முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் 900 மில்லியன் டொலர்கள் நிதியீட்டுடன் துறைமுகத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
எனினும் கடல் அரிப்பு உட்பட்ட வாழ்வாதார அச்சத்தை வெளிப்படுத்தி, இதற்கு கத்தோலிக்க மக்களிடம் இருந்து பாரிய எதிர்ப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த வார இறுதியில் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 64 காவல்துறையினர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
எனினும் திட்டம் கைவிடப்படாது என்று கேரள மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், துறைமுகப்பணிகளின் முதல் கட்டத்தை 2024க்குள் முடிவுறுத்த எதிர்பார்க்கப்படுகிறது.