பொன்னாலையில் 22 மாணவர்களுடன் இயங்கும் முன்பள்ளி ஒன்றை பதிவுசெய்யுமாறு கல்வித் திணைக்களத்தில் விண்ணப்பித்த போதிலும் பிரதேச மட்ட அதிகாரிகள் சி...
பொன்னாலையில் 22 மாணவர்களுடன் இயங்கும் முன்பள்ளி ஒன்றை பதிவுசெய்யுமாறு கல்வித் திணைக்களத்தில் விண்ணப்பித்த போதிலும் பிரதேச மட்ட அதிகாரிகள் சிலரின் முட்டுக்கட்டை காரணமாக பதிவுசெய்யப்படவில்லை.
கல்வியில் பின்தங்கிய பிரதேசம் ஒன்றின் கல்வியை முன்னேற்ற எடுக்கும் நடவடிக்கைக்கு அதிகாரிகள் முட்டுக்கட்டை போடக் காரணம் என்ன?
அண்மையில் வெளியாகிய க.பொ.த சாதாரண தர பெறுபேற்றில் வலிகாமம் வலயத்தில் 78 மாணவர்கள் ஒரு பாடத்திலேனும் சித்திபெறவில்லை. இந்த மாணவர்களின் எதிர்காலம் எப்படி அமையப்போகின்றது? இதற்கு காரணம் கூறப்போவது யார்?
பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் இருந்து 2021 க.பொ.த சாதாரண பரீட்சைக்கு 14 மாணவர்கள் தோற்றிய போதிலும் 11 மாணவர்கள் சித்தியடையவில்லை.
இதில் ஒரு மாணவி ஒரு பாடத்திலேனும் சித்தி பெறவில்லை. இவர்களின் அடிப்படைக் கல்வி சீரின்மையாலேயே இந்த நிலை ஏற்பட்டது.
தற்போது முன்பள்ளியின் பதிவைத் தடுக்கும் அதிகாரிகளே இதற்கும் பதில் கூறவேண்டும்.