மருதங்கேணி, கட்டைக்காடு பகுதியில் தத்தளித்த படகில் இருந்த வெளிநாட்டுப் பயணிகளில் சிலர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள...
மருதங்கேணி, கட்டைக்காடு பகுதியில் தத்தளித்த படகில் இருந்த வெளிநாட்டுப் பயணிகளில் சிலர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – மருதங்கேணி, கட்டைக்காடு பகுதியில் வெளிநாட்டுப் பயணிகளுடன் தத்தளித்த படகு இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டுவரப்பட்டது.
பங்களாதேஷில் இருந்து இந்தோனேசியா நோக்கி 104 பேருடன் பயணித்த படகே இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
படகில் பயணித்தவர்களுக்கு வைத்தியர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.