ஜனாதிபதியின் ஆலோசகர் ஆஷு மாரசிங்க, நாயை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் திகிலூட்டும் வீடியோ பதிவுகள் வைரலாகியுள்ளன. இந்நி...
ஜனாதிபதியின் ஆலோசகர் ஆஷு மாரசிங்க, நாயை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் திகிலூட்டும் வீடியோ பதிவுகள் வைரலாகியுள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஆஷு மாரசிங்க, தனிப்பட்ட காரணங்களை முன்வைத்து பதவி விலகியுள்ளார்.
51 வயதான மாரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு 2017-2020 வரை நாடாளுமன்றத்தில் பணியாற்றினார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நேற்று வெள்ளிக்கிழமை(23) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தி, வளர்ப்பு நாயின் உரிமையாளரான ஆதர்ஷ கரந்தன என்ற பெண்ணினால் செய்யப்பட்ட காணொளி பதிவுகளை வெளியிட்டார்.
முகநூலில் மாரசிங்கவைச் சந்தித்ததன் பின்னர் தான் மாரசிங்கவின் காதலியாக இருந்ததாகவும், அவருடன் இரண்டு வருடங்கள் வாழ்ந்ததாகவும் கரந்தனா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
நாயின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு சந்தேகமடைந்ததாகவும், மிருகத்தனமான செயல்களை அவருக்குத் தெரியாமல் ரகசியமாகப் பதிவு செய்ததாகவும் அவர் கூறினார்.
கரந்தனா, தான் மாரசிங்கவை எதிர்கொண்ட போது, அவர் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறினார். இரண்டு வருட உறவில் முழுவதும் மாரசிங்கவால் தான் உடல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
மாரசிங்கவின் மிருகத்தனம் குறித்து ஜனாதிபதியின் மனைவி மற்றும் ஜனாதிபதியின் செயலாளரிடம் தாம் முறைப்பாடு செய்ததாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கரந்தன கூறினார்.
மாரசிங்கவின் இராஜினாமாவை அறிவிக்கும் ஒரு அறிக்கையைத் தவிர, ஜனாதிபதி செயலகத்தில் இருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை.
இலங்கையின் தண்டனைச் சட்டத்தின் கீழ் மாரசிங்க குற்றமிழைத்தவராகவும் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் திருமதி பிரேமச்சந்திர வலியுறுத்தினார்.
மாரசிங்க கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர், பேராசிரியர் ஆஷு மாரசிங்க அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.