மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகளை, இன்று முதல் (டிச.09) அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கீரி ...
மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகளை, இன்று முதல் (டிச.09) அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச குறைத்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியின் விலை 10 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 16 ரூபாவினாலும், 425 கிராம் டின் மீன் ஒன்றின் விலை 35 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.
ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியின் புதிய விலை 215 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் புதிய விலை 199 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 425 கிராம் டின் மீன் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.