அனலைதீவு துறைமுகத்தில் அட்டைப் பண்ணைக்கு எதிராக இன்றையதினம் (02) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அனலைதீவு கடற்றொழிலாளர்களால் குறித்த போ...
அனலைதீவு துறைமுகத்தில் அட்டைப் பண்ணைக்கு எதிராக இன்றையதினம் (02) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அனலைதீவு கடற்றொழிலாளர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
அட்டைப் பண்ணையால் மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மீன்களின் இனப்பெருக்கத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது.
பலதடவைகள் பல தரப்பினருக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியும் உரியவர்கள் மீனவர்களது நிலையை கருத்தில் கொண்டு தீர்வு வழங்கவில்லை.
மீனவர்களது நிலையை கருத்தில் கொண்டு தீர்வு வழங்குமாறு கோரி இந்த போராட்டத்தை முன்னெடுக்கிறோம் – என்றனர்.
போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.