சினிமா இறுவெட்டு விற்பனை நிலையம் என்ற போர்வையில் மாணவர்களை இலக்கு வைத்து மாவா விற்பனையில் சூட்சுமமாக ஈடுபட்ட சந்தேக நபரை கல்முனை விசேட அதி...
சினிமா இறுவெட்டு விற்பனை நிலையம் என்ற போர்வையில் மாணவர்களை இலக்கு வைத்து மாவா விற்பனையில் சூட்சுமமாக ஈடுபட்ட சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு பிரதான வீதியில் உள்ள சினிமா இறுவெட்டு விற்பனை நிலையம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக இளைஞர்கள் ஒன்று கூடுவது தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை(25) இரவு விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் ஒன்று கிடைத்தமைக்கமைய இச்சோதனை நடவடிக்கையை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டனர்.
இதன்போது கண்டி மாவட்டம் மடவளை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் வசம் இருந்து 1 கிலோ 440 கிராம் மாவா போதைப்பொருள் மற்றும் மாவாவிற்கு கலக்கப்படும் பதினெட்டு இரசாயண ரின்னும் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்கள் யாவும் பெரிய நீலாவணை பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தப்பட்டது.