LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் Jaffna Kings வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. இன்றைய அரையிறுதி...
LPL கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் Jaffna Kings வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இன்றைய அரையிறுதிப் போட்டியில் Jaffna Kings மற்றும் Kandy Falcons அணிகள் மோதின.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Kandy Falcons அணி முதலில் துடுப்பெடுத்தாடி தீர்மானித்துள்ளது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய Kandy Falcons அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது.
இப்போட்டியில் Jaffna Kings அணிக்கு 144 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி 11 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 98 ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் போட்டி மழை காரணமாக தடைப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக போட்டியை தொடர முடியாததால் DLS முறைப்பாடிய Jaffna Kings அணி 24 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.