ஐக்கிய தேசிய கட்சிக்கான அமைப்பாளர்களை தெரிவு செய்யும் நேர்முகப் பரீட்சை நடைபெற்றுள்ளது. கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (டிச.01) இந்த ...
ஐக்கிய தேசிய கட்சிக்கான அமைப்பாளர்களை தெரிவு செய்யும் நேர்முகப் பரீட்சை நடைபெற்றுள்ளது.
கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (டிச.01) இந்த நேர்முகப் பரீட்சை நடைபெற்றது.
கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார, தவிசாளர் வஜிர அபேவர்தன, நவீன் திஸாநாயக்க உள்ளிட்டோர் இந்த நேர்முகப் பரீட்சையை நடத்தியுள்ளனர்.
கட்சியினால் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்பாளர்கள் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு நியமிக்கப்படுவார்கள்.