அமரத்துவமடைந்த சிவ தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 98 ஆவது பிறந்தநாள் அறக்கொடை விழா இன்று சனிக்கிழமை(07) தெல்லிப்பழையில் நட...
அமரத்துவமடைந்த சிவ தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 98 ஆவது பிறந்தநாள் அறக்கொடை விழா இன்று சனிக்கிழமை(07) தெல்லிப்பழையில் நடைபெற்றது
செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மறைந்த சிவத்தமிழ்ச்செல்வி தங்கங்கம்மா அப்பாகுட்டியின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நல்லை ஆதீனகுரு முதல்வர் சோமசுந்தர பரமாசார்ய சுவாமிகள்,ரிஷி தொண்டு நாத சுவாமிகள், வட மாகாண பிரதி பிரதம செயலாளர் ஆ.உமாமகேஸ்வரன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் எஸ் சிவஸ்ரீ ,யாழ் பல்கலைக்கழகத்தின் இந்து கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பத்மநாபன் உள்ளிட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான அறக்கொடை நிதியும் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கான அறக்கொடை நிதியும் வழங்கி வைக்கப்பட்டது.