யாழ் கோபால் இரு வாழைப்பகுதியில் அமைந்துள்ள நவமங்கை நிவாசத்தில் அறநெறி வகுப்பு மற்றும் கலை மன்றம் ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழம...
யாழ் கோபால் இரு வாழைப்பகுதியில் அமைந்துள்ள நவமங்கை நிவாசத்தில் அறநெறி வகுப்பு மற்றும் கலை மன்றம் ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
கோப்பாய் பிரதேச செயலாளருக்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடையே இந்து சமய ஒழுக்கங்களை மேம்படுத்திக் கொள்வதற்காக அறநெறி மற்றும் கலா மன்றம் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது.
நவமாங்கை நிவாச நிறுவனர் சுவர்ணா நவரட்ணம் அவர்களின் நிதி பங்களிப்புடன் குறித்த செயற்பாடானது தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் யாழ் தேசியக் கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்ரமணியம் பரமானந்தம் , கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் அதிபர் லதீசன், கோபாய் தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் தனபாலன், சங்கீத விரிவுரையாளர் சிவை கு கணேசன், யாழ் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்யர் சிவகனேஸ்வரன் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.