தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமை வெளிப்படத்தன்மை இல்லை.. இந்திய மத்தியஸ்தம் வேண்டும்.. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தூதுவரிடம் மஜகர் கையளிப்ப...
தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமை வெளிப்படத்தன்மை இல்லை.. இந்திய மத்தியஸ்தம் வேண்டும்.. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தூதுவரிடம் மஜகர் கையளிப்பு.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலில் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையும் வெளிப்படைத் தன்மையும் காணப்படாத நிலையில் இந்தியா மத்தியஸ்தம் வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு நேற்று திங்கட்கிழமை யாழ் இந்திய துணை தூதர் ராஜேஷ் நடராஜ் ஜெபாஸ்க பாஸ்கரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த மஜகரில் தெரிவிக்கப்பட்டதாவது வடக்கு கிழக்கு மாகாணங்களில் பின் தங்கிய மக்களின் உரிமைக்காகவும் மேம்பாட்டுக்காகவும் செயற்படும் 14 அடி மட்ட அமைப்புக்களை நாங்கள் கொண்டுள்ளோம்.
அந்த வகையில் வடக்கு கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிறுபான்மை தமிழ் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிகளை தொடர் கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளதாக அறிகிறோம்.
ஜனாதிபதிகளுடனான கலந்துரையாடல் தொடர்பில் தமிழ அரசியல் கட்சிகளுக்கு இடையில் விதமான ஒருங்கிணைப்பும் வெளிப்படத் தன்மை இல்லை.
ஜனாதிபதியுடன் இடம்பெறும் கலந்துரையாடலில் தமிழ் கட்சிகளை ஒழுங்குபடுத்துவதோடு இந்திய மத்தியஸ்தம் வகக்க வேண்டும்.
நில அபகரிப்பு இராணுவ மயமாக்கல் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான பல்வேறு பாகுபாடுகள் தொடர்பில் விதமான தீர்வு வெட்டப்படாத நிலையில் குறித்த பேச்சு வார்த்தை இடம் பெறவுள்ளது.
தமிழ் மக்களின் அபிலாசையான ஐக்கிய இலங்கைக்குள் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் ஒரு கூட்டாட்சி மாதிரியான அதிகார பகிர்வே.
ஆகவே தமிழ் மக்களுடைய நிரந்தர அரசியல் தீர்வை இந்தியா பெற்றுக் கொடுப்பதற்கு ஆவணை செய்வதோடு இந்தியாவின் வழிகாட்டலையும் ஆதரவையும் வேண்டி நிக்கிறோம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.