ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும். அதை செய்யத் தவறின், ஜனாதிபதி வரும் இடம...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும். அதை செய்யத் தவறின், ஜனாதிபதி வரும் இடமெல்லாம் கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்துவோம் என முன்னாள் வடக்குமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
சமகால நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “வேலன் சுவாமியை கைதுசெய்தமையை கண்டிப்பதோடு இவ்வாறெல்லாம் ஜனநாயக போராட்டங்களை அடக்க முடியாது ஜனாதிபதி இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்
அவ்வாறு விடுதலை செய்யத் தவறின் ஜனாதிபதிக்கு எதிராக அனைத்து இடங்களிலும் கறுப்புக்கொடி போராட்டம் நடத்துவோம்.
அத்துடன் எங்களை எந்த சட்டத்தின் கீழும் கைதுசெய்யலாம் ,அதற்காக நாங்கள் அஞ்சப் போவதில்லை. எத்தகைய தடைகள் வந்தாலும், நாங்கள் அவற்றை தகர்த்து,எமது மக்களுக்காக எங்களுடைய ஜனநாயக ரீதியான போராட்டத்தை தொடர்ச்சியாக நாங்கள் நடத்துவோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.