‘நவ லங்கா நிதாஸ் பக்சய’ (புதிய லங்கா சுதந்திரக்கட்சி) யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத...
‘நவ லங்கா நிதாஸ் பக்சய’ (புதிய லங்கா சுதந்திரக்கட்சி) யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் அக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சீனியர் குணநாயகம் தலைமையிலான குழு கட்டுப்பணத்தை செலுத்தியது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆதரவுடன் தேர்தலில் களமிறங்குவதாக அக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சீனியர் குணநாயகம் தெரிவித்தார்.
நவ லங்கா நிதாஸ் பக்சவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம காணப்படுகிறார்.