IDM National Campus International இனால் இக்கால கட்டத்தில் சட்டத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்திருந்த 'சட்டத்திற்கு ஓர் அறி...
IDM National Campus International இனால் இக்கால கட்டத்தில் சட்டத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்திருந்த 'சட்டத்திற்கு ஓர் அறிமுகம்' கருத்தரங்கு அண்மையில் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் பெருமளவிலான மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் பெருமளவிலான மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
IDM National Campus International உடைய பிராந்திய பணிப்பாளர் கலாநிதி அன்ட்ரூ அஸ்லி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்ப்பாணம் வலயக்கல்விப் பணிப்பாளர் ராதாகிருஸ்ணன், தேசிய சேமிப்பு வங்கியின் பிராந்திய முகாமையாளர் நடராஜர் பகீரதன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பௌதீகவியல் பீட தலைவர் - சிரேஸ்ட விரிவுரையாளர் திருநாவுக்கரசு பத்மதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்தக்கருத்தரங்கில் வளவாளர்களாக சட்டத்தரணிகளான பரம்சோதி ஜனார்த்தன் மற்றும் புவீந்திரன் ரொக்னோ ஆகியோர் பங்கேற்றனர்.
முழு நாள் கருத்தரங்கின் இறுதியில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் பெறுமதிமிக்க சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.