புத்தல - கதிர்காமம் வீதி, உடவலவ, ஹபரன போன்ற வீதிகளில் யானைகளுக்கு உணவு வழங்குபவர்கள் மற்றும் மிருகங்களை துன்புறுத்தும் வகையில் செயற்படுவர்கள...
புத்தல - கதிர்காமம் வீதி, உடவலவ, ஹபரன போன்ற வீதிகளில் யானைகளுக்கு உணவு வழங்குபவர்கள் மற்றும் மிருகங்களை துன்புறுத்தும் வகையில் செயற்படுவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்குமாறு வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வீதிகளில் காட்டு யானைகளால் வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், காட்டு யானைகளை விரட்டியடிப்பதற்காக நடமாடும் வாகனங்களை ஈடுபடுத்தவுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, இதற்கான வேலைத்திட்டம் அண்மைய சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது.