வவுனியா மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோர் சங்க செயலாளரின் வீட்டின் மீது இடம்பெற்ற கழிவொயில் வீச்சிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்ட...
வவுனியா மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோர் சங்க செயலாளரின் வீட்டின் மீது இடம்பெற்ற கழிவொயில் வீச்சிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் வெளியிட்டது.
கழிவொயில் வீச்சு இடம்பெற்ற வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அ.விஜயகுமார், ஜனவரக 15ஆம் திகதி தேசிய தைப்பொங்கல் தினத்தினை யாழில் முன்னெடுத்த வேளை முன்னின்று வலிந்து காணமலாக்கப்பட்டோர் சங்க செயலாளர் ஜனநாயகரீதியில் போராட்டத்தினை முன்னடுத்திருந்தார்.
இதற்கான மறைமுகமான அச்சுறுத்தல் விடுக்கும் ஒன்றாகவே இதனை நாம் நோக்குகின்றோம்.ஆகவே தொடர்ச்சியாக காணமலாக்கப்பட்டோரின் நீதிவேண்டி போராடுகின்றவர்கள் மீதான வன்முறைகள் தடுக்கப்படவேண்டும் என்றார்.