யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் பதவி விலகல் தொடர்பில் சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில் மாநகர சபை அங்கத்தினர்களான சகல கட்சி உறுப்பினர்களையும...
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் பதவி விலகல் தொடர்பில் சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில் மாநகர சபை அங்கத்தினர்களான சகல கட்சி உறுப்பினர்களையும் ஆளுநர் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார்.
மாநகர சபையின் முதல்வராக பதவி வகித்த வி.மணிவண்ணனின் வரவு – செலவுத் திட்டம் ஒரு தடவை தோல்வி கண்ட நிலையில் இரண்டாவது தடவையும் தோல்வி காணும் என்ற நிலை ஏற்பட்டதனால் அவர் தனது பதவி இராஜினாமாச் செய்தார்.
இதனால் ஏற்பட்ட முதல்வர் வெற்றிடத்திற்கு ஒருவரை நியமிப்பதா அல்லது சபையை கலைப்பதா என்பதில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தரப்பில் காணப்படும் குழப்ப நிலையை அடுத்தே இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கட்சியையும் தனித் தனியே அவர் சந்தித்துப் பேச இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அனேகமாக நாளை மறுதினம் இந்தச் சந்திப்புகள் நடைபெறவுள்ளன. ஆளுநரே நேரடியாக யாழ் மாநகர சபை அங்கத்தினர்களைச் சந்திப்பாரா அல்லது ஆளுநர் சார்பில் அதிகாரிகள் சந்திப்பரா என்பது தெரியவில்லை.