உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் இருந்து போட்டியிட விரும்பும் இளைஞர்கள், பெண்கள் உள்ளடங்கலான வேட்பாளர்களை நேற்றைய தினம் (06...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் இருந்து போட்டியிட விரும்பும் இளைஞர்கள், பெண்கள் உள்ளடங்கலான வேட்பாளர்களை நேற்றைய தினம் (06) வவுனியாவில் ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளருமான உமாச்சந்திரா பிரகாஷ் ஆகியோர் சந்தித்தனர்.
விஜயத்தின் ஆரம்பத்தில் ஸ்ரீ போதிதக்சிணாராமய விகாரை மற்றும் குட்சைட் வீதி கருமாரி அம்மன் ஆலயம் ஆகியவற்றில் வழிபாடுகளை மேற்கொண்டதுடன் கண்டி வீதியில் அமைந்துள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் சாந்திகுமார் நிரோஸ்குமார் அவர்களின் அலுவலகத்தில் மக்கள் சந்திப்புடன் உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் சந்திப்பு இடம்பெற்றமையுடன் வவுனியா நகரில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட பிரதான தொகுதி அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சினி அவர்களின் அலுவலகத்திலும் உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் சந்திப்பு என்பன இடம்பெற்றிருந்தன.
எதிர்வரும் இரு தினங்களில் வடக்கு மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களிலும் ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் மக்கள் சந்திப்பு , வேட்பாளர்களுடான கலந்துரையாடல் என்பன இடம்பெறவுள்ளன.