எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, அரச அச்ச...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான அடிப்படைப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்க அச்சக அலுவலகத்தின் பிரதானி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
அச்சுப் பிழைகள், வாக்குச் சீட்டு திருத்தங்கள் உள்ளிட்ட அனைத்தும் மீண்டும் சரிபார்த்து, அதன் துல்லியத்தை தேர்தல் ஆணையம் மறு ஆய்வு செய்து, அச்சிடுதல் தொடர்பான பணிகள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்த வாரம் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி நடைபெற உள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.