கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (13) விபசார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போது ஐந்து வெளிநாட்டு பெண்கள் கைத...
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (13) விபசார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போது ஐந்து வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கடற்கரை மாவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் தங்குமிட விடுதி என்ற போர்வையில் நடத்தி செல்லப்பட்ட விபசார விடுதி இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது விபசார விடுதியின் முகாமையாளருடன் கைது செய்யப்பட்ட பெண்கள் 30, 35 மற்றும் 38 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் வெளிநாட்டு பிரஜைகள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ள நிலையில், கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.