அபிவிருத்தி லொத்தர் சபையின், கடந்த இரண்டு மாதங்களில் வடமாகாணத்தில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராசா தலைமையில், ...
அபிவிருத்தி லொத்தர் சபையின், கடந்த இரண்டு மாதங்களில் வடமாகாணத்தில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராசா தலைமையில், ஆளுநர் அலுவலகத்தில் வைத்து இன்று காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
வடகிழக்கு பிராந்திய முகாமையாளர் எஸ்.குமாரசிறி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட விற்பனை மேம்படுத்தல் அதிகாரி எஸ்.தவகோகுலன், கிளிநொச்சி மற்றும் வவுனியா விற்பனை மேம்படுத்தல் அதிகாரி எஸ்.பிரதீபன் ஆகியோரின் முன்னிலையில் மன்னார் மாவட்டத்தில் சனிதா அதிஷ்டலாபச்சீட்டு மூலம் வெற்றிபெற்ற வெற்றியாளருக்கு மாபெரும் சுப்பர் பரிசான 3 கோடி 26 இலட்சம் ரூபா காசோலை வழங்கப்பட்டது.
பளை பிரதேசத்தில் வலம்புரி அதிஷ்டலாபச்சீட்டு மூலம் வெற்றிபெற்ற வெற்றியாளருக்கு 20 இலட்சம் ரூபா காசோலையும், சங்கானை, யாழ்பாணம், சாவகச்சேரி, வவுனியா மன்னார் பிரதேசங்களில் சனிதா, கப்ருக்க அதிஷ்டலாபச்சீட்டுகளூடாக வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா காசோலைகளும் ஆளுநரால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.