துருக்கி நிலநடுக்கம் தொடர்பில் செய்திகளை வெளியிட்ட மிர் அலி கொஸெர் என்ற ஊடகவியலாளர் தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் அவருக்...
துருக்கி நிலநடுக்கம் தொடர்பில் செய்திகளை வெளியிட்ட மிர் அலி கொஸெர் என்ற ஊடகவியலாளர் தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் அவருக்கு மூன்று வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளார்.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுத்தக்கத்தில் சுமார் 50,000 பேர் கொல்லப்பட்டிருப்பதுடன் மேலும் பலர் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நிலநடுக்கத்தை அடுத்து துருக்கியைச்சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான மிர் அலி கொஸெர், அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களையும் மீட்புப்பணியாளர்களையும் நேர்காணல் செய்து, அவற்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.
இருப்பினும் ‘பொய்யான தகவல்களைப் பரப்பினார்’ என்ற சந்தேகத்தின்பேரில் தற்போது அவர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுவருவதுடன் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்கக்கூடிய அச்சுறுத்தலுக்கும் இலக்காகியுள்ளார்.