திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடைபெறுமா இல்லையா என்பதை 8ஆம் திகதி அறிவிக்கத் தயார் என்று பிரதமர் தினேஷ் குணவர்த...
திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடைபெறுமா இல்லையா என்பதை 8ஆம் திகதி அறிவிக்கத் தயார் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில், பிரதமர் தினேஷ் குணவர்தன, பசில் ராஜபக்ஷ ஆகியோர் கட்சித் தலைவர்கள் குழுவைச் சந்தித்தனர்.
இதன்போது, தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கத்தின் கருத்தை தெரிவிக்குமாறு பிரதமரிடம் அந்தக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி அரசாங்கக் கட்சிக் கூட்டத்தில் இது தொடர்பில் உறுதியான கருத்தை தெரிவிக்க முடியும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.
தேர்தலை நடத்துவது குறித்து முடிவெடுக்கும் முழு உரிமையும் தேர்தல் ஆணையத்திடமும் நீதிமன்றத்திடமும் ஒப்படைக்கப்பட்ட முடிவு என்றும் பிரதமர் கூறியுள்ளார்.