ஜேர்மனி, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டுக்கு அனுப்பப்பட்ட உயிர்கொல்லி போதைப் பொருளான எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் குஷ...
ஜேர்மனி, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டுக்கு அனுப்பப்பட்ட உயிர்கொல்லி போதைப் பொருளான எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் குஷ் ரக போதைப்பொருட்கள் என்பன மத்திய தபால் பரிமாற்றகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு, பாணந்துறை, பொரலஸ்கமுவ, பாதுக்கை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் உள்ள போலி முகவரிகளுக்கு பொதிகள் ஊடாக அனுப்புவதற்கு தயார்ப்படுத்தப்பட்ட நிலையில் இவை கிடைக்கப்பெற்றுள்ளன.
பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 207 எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் 750 கிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், அதன் பெறுமதி 13 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.